Thursday, October 27, 2011

கணிக்க முடியாது

ஒரு கருவில் உருவாகும்
உயிரும்,
ஒரு மனதில் உருவாகும்
காதலும் - எப்பொழுதும்
எவராலும்
கணிக்கமுடியாது!

கண்ணீராக

நீ என்னை பிரிந்தாலும் ..
.நீ என்னை மறந்தாலும் ... 
என்றாவது ஒரு நாள்
 நீ என்னை நினைக்கும்போது 
உன் கண்களில் இருப்பேன் 
கண்ணீராக.

காதல் வைரஸ்

டவுன்லோட் செய்தேன்
உன்னை!
என் இதயம் முழுக்க
காதல் வைரஸ்!

கனவு

இறைவனின் படைப்பில் எனக்கு பிடித்தது
கனவு...
ஏனென்றால் அதில் மட்டும் தான் நீ எனக்கு என்று காண்பதால்........!

வெட்கங்கெட்ட மனது

நீ என்னை
எத்தனை முறை
வெறுத்தாலும்
உன்னை மட்டுமே
தேடித் தேடி
அலைகிறது
இந்த
வெட்கங்கெட்ட மனது...!

அன்பை மட்டும்....!

எதிர்பார்ப்புகள் இல்லை என்றால் 
வாழ்வில் அர்த்தமே இல்லை...
எதிர்பார்கிறேன் என்றும் உன்னிடம் 
அழகான அன்பை மட்டும்....!

இருமுறை ஏனடி தேடுகிறாய்?

இதயத்தில் காதல் இருக்கின்றபோது
இதழ்களை ஏனடி மூடுகிறாய்...?
ஒருமுறை என்னைக் காணாது போனால்
இருமுறை ஏனடி தேடுகிறாய்?

Wednesday, August 24, 2011

கற்று கொடுக்கிறேன்....

நான் நேசித்த அனைவரும்
என்னை நேசிக்க மறுத்த போதும்
எங்கோ ஒரு மூலையிலிருந்து நீ
என்னை நேசித்தாய்…..
என்றாவது ஒரு நாள்
நீயும் என்னை
வெறுப்பதாய் இருந்தால்
அதை இன்றே கூறிவிடு
இப்போதிலிருந்தே கற்று கொடுக்கிறேன்
என் இதயத்திற்கு வலிகளை……

மரணமே இல்லை.......

என் காதல் 
இயற்கைக்கு புறம்பானது 
ஏன் தெரியுமா? 
மரணமே இல்லை என்பதால்....

உயிர் பிரியும் வரை .!

உன் அன்பினில் 
உறங்கிட ஆசை 
விடியும் வரை அல்ல , 
உயிர் பிரியும் வரை .!

உன் நினைவுகள் ...

வெகு தூரம் சென்றாலும்
விண் மீன் மறைவதில்லை..
விழி மூடி உறங்கினாலும்
உன் நினைவுகள் என்றும்
பிரிவதில்லை.

உன் நினைவு.. ...

சிறையிடப் படாமல் இருந்தாலும்
பறக்க விரும்பாத பறவை போல
என் மனதிலேயே தங்கியிருக்கும்
உன் நினைவு..

காதல் என்பது........

காதல் என்பது
கடலில் போட்ட
கல்லைப் போன்றது
கரைந்தும் போகாது
கரையும் சேராது.!

உயிரை மட்டும்....

நினைவெல்லாம் உன்னோடு
எதற்காக விட்டுச்சென்றாய்
இந்த பாழாய்ப்போன
உயிரை மட்டும் என்னோடு ..!

தனிமையின் இருளுக்குள் ..!

நீயில்லாமல் தனியே
தொலைந்து போகிறேன்
மீளாத தனிமையின்
இருளுக்குள் ..!

உனக்காகவே....

உனக்காகவே
எல்லாரையும்
இழந்தேன்.
நீ என்னை இழ‌ப்பாய்
என்று தெரியாம‌ல் ..!

அடுத்த பிறவி ...

அடுத்த பிறவி
எடுத்து
உன்னுடன்
வாழுவேன்
என்ற சந்தோஷத்தில்
உன்னை விட்டு
செல்கிறேன்
கல்லறைக்கு.....

தனிமை ....

தனிமை என்னும் நரகத்தில் 
அரசனாய் இருப்பதைவிட......!
உன் மனம் எனும் சொர்க்கத்தில் 
கைதியாக இருக்க விரும்புகிறேன்.......!!

நீ இல்லாத நொடிகள் ....

நீ இல்லாத
நொடிகள்
கூட இனிக்கிறது
உன் அழகிய
         நினைவுகளால்......

காதலை தோற்கடித்துவிடாதே ....

உன்னிடம் தோற்க
நான் தயார்தான்
ஆனால் நம்
காதலை
தோற்கடித்துவிடாதே
அந்த தோல்வியை
தாங்கி கொள்ளும்
வலிமை என்
இதயத்திற்கு இல்லை...........

ஒரு துளி கண்ணீரும் ...

என் கண்ணில்
இருந்து வரும்
ஒரு துளி
கண்ணீரும்
உன்மேல்
நான் வைத்திருக்கும்
அன்பை
வெளிபடுத்தும்......

வேதனையல்ல ....

என்
உயிர்தான் உறங்குகிறது ....
உள்ளம் மலர்ந்த
வேதனையல்ல ....

அதனால் தானோ என்னவோ
தூக்கத்திலும்
உளறுகிறேன் ......

என் துக்கத்தை
கவிதையாக........

இதயத்தை அல்ல ....

நீ என்னிடம்
இருந்து
எடுத்து சென்றது
என் இதயத்தை
அல்ல
என் இதயத்துடிப்பை.....

இதயம் ...

இதயம்
உண்மையனவர்களுக்கு தாஜ்மஹால்
துரோகிகளுக்கு வாடகை வீடு
ஏமார்ந்து போனவர்களுக்கு நரகம்
வெற்றி பெற்றவர்களுக்கு சொர்க்கம்
எனக்கு அது நினைவாலயம்.......
என் நினைவெல்லாம் நீயே.........

உன்னை நேசிக்கிறேன் ....

அன்பே
நீ சொன்ன பொய்களில்
உண்மை என்று
ஆணித்தனமாக
அதிகம் நான்
நம்பிய பொய்
உன்னை நேசிக்கிறேன் என்று
உள்நெஞ்சில்
நீ கை வைத்து சொன்னாயே.....
அதைதான்.

நாட்களை நினைத்து...........

நாம் பிரியவும் இல்லை,
நம்மை பிரிக்கவும் இல்லை.
விரும்பியே இருப்போம்,
விலகியே இருப்போம்.
பழகிய அந்த இனிய நாட்களை நினைத்து....

உன் நினைவிலே நான்...,

நினைவுகளால் என்னில் கலந்த
உன்னை பிரிக்க நினைத்தேன்,
விளைவு...,
காற்றில் கலந்த என் நினைவு..,
உன் நினைவின்றி என்
நிழல் கூட இல்லை..,
என்றும் உன் நினைவிலே நான்...,

கண்ணீர்......

என்றும் சிரித்துக் கொண்டே
இருக்க.....,
என் இதய பூங்காவில்
வீசுவது சில்லென்ற தென்றல்
காற்றல்ல....,
சீரிய புயல் காற்று
என் கண்கள் எனும் கருமேகத்தில்
பட்டதால் எந்நேரமும் ஓயாது
கொட்டும் அடை மழையாய்
கண்ணீர்......,

ஒரு நிமிடம்....

ஒரு நிமிடம்!!!!!!
உயிரே எனக்காக
ஒரு நிமிடம்!!!
உன்னிடம் பேச அல்ல,
உன்னிடம் வாழ அல்ல,
உன்னிடம் நினைக்க
அல்ல,
உன்னிடம் முத்தம்
மிட அல்ல,
உன்னிடம்
உயிரைவிட அல்ல,
என்
இறப்புக்கு பிறகு ஒரு
நிமிடம்"
கண்ணீர் விட!
அந்த ஒரு நிமிடம்
போதும் அன்பே!!!
நான் வாழ அல்ல,
என் உயிர்
வாழ .............

சுடுகாடு ...

நீ
விலகிக்கொண்டேயிருக்கிறாய்
சுடுகாடு
என்னை
நெருங்கிக்கொண்டேயிருக்கிறது..................!!!!!!

உயிரை சுமப்பவள்....

யார் சொன்னது பெண் மட்டும்தான் 
உயிரை சுமப்பவள் என்று 
ஒவ்வொரு ஆணின் மனதை தொட்டு பார்
அதில் ஒரு பெண்ணின் நினைவு 
உயிராக இருக்கும்..!

கண்ணீர் ...

மழைத்துளிகளும் ஒருநாள்
மண்ணில் விழமறுக்கும்
பூமியில் நிறைந்திருக்கும்
என் கண்ணீர் கண்டு ........

காரணம் தெரியுமா...?

சிறு சிறு சண்டைகளில் கூட,
நான் சிதைந்து போவதின்,
காரணம் தெரியுமா...?
எங்கே அது பெரியதாகி விடுமோ,
நம் பிரிவை நீள செய்து விடுமோ,
என்ற அச்சம் தான்...

அவளை பார்க்காத போது.........

அவளை பார்த்த போது தான்
என் கண்கள் இருப்பதை உணர்ந்தேன்
அது போல அவளை பார்க்காத போது தான்
அதில் உள்ள கண்ணீரையும் உணர்ந்தேன் ....

Tuesday, August 23, 2011

முடியவில்லையடி ....

முடியவில்லையடி என்னால்..!!
சத்தமின்றி என் மனதோடு
உன்னை மறப்பேன் என்று
செய்துகொண்ட சத்தியமும்
ஏனோ உன் நினைவுகளால்
இன்று செயல் இழந்து போய்விட்டது.!

நிஜம் என்றால் .........

நீ விரும்பிய இதயத்தை
உன்னால் எப்பொழுதும் வெறுக்க முடியாது ,
அது போல அந்த இதயத்தை தவிர
எவராலும் உன்னை அழவைக்கவும் முடியாது ,
நீ நேசித்தது நிஜம் என்றால் ..........


செத்துக் கொண்டிருக்கிறேன்...

எப்போதும் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்
எப்போதும் உன்னிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும்
எப்போதும் உன்னுடன் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்
இப்போது எதுவும் முடியாத காரணத்தால் எப்போதும்
உன்னாலே செத்துக் கொண்டிருக்கிறேன்...



எல்லா ஜென்மத்திலும் ...

என் அன்பே இந்த ஜென்மம் மட்டுமல்ல 
என் எல்லா ஜென்மத்திலும்
நீதான் வேண்டும் என்றும் உன்னுடன்
உனக்காகவே 
வாழ்ந்தேன் 
வாழ்கின்றேன் 
வாழ்வேன்...

நினைவு அலை...

நீ என்னுடன் இல்லாத போதும்
நீயே நான் வாங்கும் மூச்சு
நீ என்னைக் காயப்படுத்திய போதும்
நீயே என் துன்பத்திற்கு மருந்து
நீ இங்குப் பார்க்காத போதும்
நீயே நாளும் என் பார்வை
நீ என்னைத் திட்டிய போதும்
நீயே நான் நாடும் ஜீவன்
நீ என்னை மறந்த போதும்
நீயே என் நினைவு அலை...

கற்றுக்கொடு...

அமைதியாய் இருந்த என் உள்ளத்தில் 
உன் காதல் என்னும் புயல் வீசியதால் 
இழப்புகள் ஏராளம்...
 ஈடுசெய்ய முடியவில்லை
உன் நினைவுகள் தரும் வலியால் துடிக்கும் 
என் இதயத்திற்கு கற்றுக்கொடு... 
உன்னை மறக்க..! 
இல்லையேல் 
என்னை மாற்றி கொள்ள..!

ஆயுள் ...

என் ஆயுள்முழுவதும் உன் அன்பு வேண்டும்.
இல்லையெனில்.....
உன் அன்பு உள்ளவரை மட்டும் என் ஆயுள் போதும்........

என்னோடு இருப்பதால்...

கனவுகள் எனக்கு பிடிக்கும் ...
நீ வருவதால் ..
கண்ணீர் எனக்கு பிடிக்கும் ..
உனக்காக வருவதால்...
தனிமை எனக்கு பிடிக்கும்..
உன் நினைவுகள் என்னோடு இருப்பதால்...

பிடிக்காது....

உனக்கும் அழுவது
பிடிக்காது..

எனக்கும் அழுவது
பிடிக்காது....

உனக்காக நான் செய்தவைகளிலே
மிகவும் கடினமானது - இப்போது
உன் பிரிவில் நான் அழாமல்
இருப்பது....

உன்னை நினைத்து .....

உன்னை நினைத்து உறக்கம் தொலைத்தேன்
உயிரில் உறவாய் உன்னை நினைத்து கனவை வளர்த்தேன்
உன்னை பிரிந்து ஏக்கத்தில் துடித்து
உயிருடன் இன்று இறந்தே சாகிறேன்.........;

என்னருகில் நீ இருந்தும்.........

கண்களுக்கு அருகில் இமைகள் இருந்தாலும்
கண்களால் இமைகளை பார்க்க முடிவதில்லை
இருந்தும் கண்கள் இமைகளை வெறுப்பது இல்லை
என்னருகில் நீ இருந்தும்
என்னால் உன்னுடன்
பேச முடியவில்லை இருந்தும்
உன்னை
என்னால் வெறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது...

வெறுத்தேன்: ...

அவளுக்கு-பிடிக்காத,
எல்லாவற்றையும்-வெறுத்தேன்:
என்னையும்-சேர்த்து...

Monday, August 22, 2011

காதல் வலிகள்.....

கவலை என்பது 
வலிகள் நினைவில் இருக்கும் வரை.....
காதல் வலிகள் என்பது
 உடலில் உயிர் பிரியும் வரை.....

உன் நினைவுகளோடு ....

காதலித்த உன்னோடு மட்டுமே 
வாழவேண்டும் என்று ஆசைப்பட்டேன். 
ஆனால் இன்று காதலித்த உன் நினைவுகளோடு 
மட்டுமாவது வாழ வேண்டும் என்ற 
ஆசையோடு விலகிச் செல்கிறேன் உன்னை விட்டு

உன் நினைவுகள் ....

உன்
நினைவுகள்
என்
கனவுகளையும்
தூங்க விடுவதில்லை.. ♥

ஒரு துளி கண்ணீர் ....


ஆணின் புன்னகையை விட 
பெண்ணின் புன்னகை மிக அழகு, 
ஆனால் பெண்ணின் அழுகையை விட 
ஆணின் ஒரு துளி கண்ணீர் வலி நிறைந்தது.....