Thursday, January 10, 2013

உந்தன் நினைவுகளைத்தவிர....

உனக்கும் எனக்கும் இடையில் 
                                                         எல்லாமே ஓய்ந்துபோனது....

                                                  அடிக்கடி அலைகளாய் வந்து மோதும் 
                                                      உந்தன் நினைவுகளைத்தவிர....

நானும் ஒரு கைதி

என்னைத் தெரிந்துகொண்டே
யாரென்று கேட்டவளுக்கு
பதிலுரைத்தேன் ...

உன் கருவிழிகள்
சிறையெடுத்த காட்சிகளில்
நானும் ஒரு கைதி...

உதாரணம் ஆகிறாய்

பல திசைகளில்
சிதறும் என்
சிந்தனைக் கூட்டங்களை
உன்னிடத்தில்
குவிய வைக்கிறாய்...♥ ♥

இதுவரை உணர்ந்திடாத
வேதியியல் மாற்றங்களை
என்னுள்
உணர வைக்கிறாய்...♥ ♥

உன்னைப் பார்க்கையில்
கடந்து போகும்
நொடிப்பொழுதுகளை
சுருங்க வைக்கிறாய்...♥ ♥

உன்னைப் பார்க்க
காத்து நிற்கும்
சமயங்களில்
அதே நொடிகளை
தேடவும் வைக்கிறாய்...♥ ♥

சப்தமின்றி ஓரவிழிகளால்
பேசுவதில் என்னை
வித்தகன் ஆக்குகிறாய்...♥ ♥

ரணம் இன்றி நெஞ்சத்தை
கொய்வதில் நீயே
உதாரணம் ஆகிறாய்...♥ ♥

உன் அழகுக்கு

நான் கொள்ளை அடிக்க அடிக்க
கொஞ்சமும் குறைவதில்லை
உன்னிடம் அழகு…

உன் அழகுக்கு அழகுகூட்ட
முகப்பூச்சு ஏதும் வேண்டாம்
உன் வெட்கங்களை அள்ளி பூசிக்கொள் போதும்…


Tuesday, January 8, 2013

உன் மௌன அஞ்சலிக்காக !!!

உன் மௌனம் எனக்கும் பிடிக்கும் 
என்பதால்தான் என் இதயத்துடிப்பின் 
சத்தத்தையும் நிறுத்திவிட்டு 
என் கல்லறையில் 
காத்துக்கொண்டிருக்கிறேன் 
உன் மௌன அஞ்சலிக்காக !!!

என் இதயமும் தடுமாற்றத்துடன் துடிக்கிறது

என் இதயமும் தடுமாற்றத்துடன் துடிக்கிறது 
எனக்காக துடிப்பதா 
என்னுள் வந்த உனக்காக துடிப்பதா என்று !!!


ஏங்கியபடி

நொடிக்கு 72 முறை மட்டுமல்ல 
அதையும் தாண்டி துடிக்கிறது 
என் இதயம் 
உன்னிடம் பேச வேண்டுமென்று 
ஏங்கியபடி !!!