Thursday, January 10, 2013

உந்தன் நினைவுகளைத்தவிர....

உனக்கும் எனக்கும் இடையில் 
                                                         எல்லாமே ஓய்ந்துபோனது....

                                                  அடிக்கடி அலைகளாய் வந்து மோதும் 
                                                      உந்தன் நினைவுகளைத்தவிர....

நானும் ஒரு கைதி

என்னைத் தெரிந்துகொண்டே
யாரென்று கேட்டவளுக்கு
பதிலுரைத்தேன் ...

உன் கருவிழிகள்
சிறையெடுத்த காட்சிகளில்
நானும் ஒரு கைதி...

உதாரணம் ஆகிறாய்

பல திசைகளில்
சிதறும் என்
சிந்தனைக் கூட்டங்களை
உன்னிடத்தில்
குவிய வைக்கிறாய்...♥ ♥

இதுவரை உணர்ந்திடாத
வேதியியல் மாற்றங்களை
என்னுள்
உணர வைக்கிறாய்...♥ ♥

உன்னைப் பார்க்கையில்
கடந்து போகும்
நொடிப்பொழுதுகளை
சுருங்க வைக்கிறாய்...♥ ♥

உன்னைப் பார்க்க
காத்து நிற்கும்
சமயங்களில்
அதே நொடிகளை
தேடவும் வைக்கிறாய்...♥ ♥

சப்தமின்றி ஓரவிழிகளால்
பேசுவதில் என்னை
வித்தகன் ஆக்குகிறாய்...♥ ♥

ரணம் இன்றி நெஞ்சத்தை
கொய்வதில் நீயே
உதாரணம் ஆகிறாய்...♥ ♥

உன் அழகுக்கு

நான் கொள்ளை அடிக்க அடிக்க
கொஞ்சமும் குறைவதில்லை
உன்னிடம் அழகு…

உன் அழகுக்கு அழகுகூட்ட
முகப்பூச்சு ஏதும் வேண்டாம்
உன் வெட்கங்களை அள்ளி பூசிக்கொள் போதும்…


Tuesday, January 8, 2013

உன் மௌன அஞ்சலிக்காக !!!

உன் மௌனம் எனக்கும் பிடிக்கும் 
என்பதால்தான் என் இதயத்துடிப்பின் 
சத்தத்தையும் நிறுத்திவிட்டு 
என் கல்லறையில் 
காத்துக்கொண்டிருக்கிறேன் 
உன் மௌன அஞ்சலிக்காக !!!

என் இதயமும் தடுமாற்றத்துடன் துடிக்கிறது

என் இதயமும் தடுமாற்றத்துடன் துடிக்கிறது 
எனக்காக துடிப்பதா 
என்னுள் வந்த உனக்காக துடிப்பதா என்று !!!


ஏங்கியபடி

நொடிக்கு 72 முறை மட்டுமல்ல 
அதையும் தாண்டி துடிக்கிறது 
என் இதயம் 
உன்னிடம் பேச வேண்டுமென்று 
ஏங்கியபடி !!!

அர்த்தம் அற்றது !!!

தேவையான நேரத்தில் காட்டப்படாத அன்பு 
பின்பு ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து வந்தாலும் 
அர்த்தம் அற்றது !!!


பூக்களுக்குள் சண்டை

நீ பிறக்க முன்பும் பூக்களுக்குள் சண்டைதான் 
தங்களில் யார் அழகென்று.... 

நீ பிறந்த பின்பும் பூக்களுக்குள் சண்டைதான் 
உன் கூந்தலில் யார் அமர்வதென்று...

உன்னிடம் பகிரமுடியாமல்

உன்னிடம் பகிரமுடியாமல் போகும் 
இனிப்புகள் கூட கசக்கிறது...♥♥
உன்னுடன் பகிர்கையில் கசந்தவைகள் 
கூட இனிக்கிறது...♥♥

சேர்ந்திருந்தாலும் கசக்கும்

புரிதல் இருந்தால்
பிரிவும் இனிக்கும்
இல்லை என்றால்
சேர்ந்திருந்தாலும் கசக்கும்...♥♥
 

உன் நினைவினால்

கண்ணீர் வருவதிலும் 
ஒரு சுகம்
அது,
உன் நினைவினால் 
வருவதனால்...♥♥

உன்னைத் தவிர

எதை வேண்டுமானாலும்
எடுத்துக்கொள்
என்னிலிருந்து....
உன்னைத் தவிர

நீ தவறவிட்டது

தொலை பேசியில்
உன்னை
தொடர்பு கொள்ளும் போது
என் அழைப்பை
பல முறை
தவறவிட்டாய்...♥

நீ தவறவிட்டது என் அழைப்பை
மட்டும் அல்ல என் அன்பையும் தான்...♥

ஒவ்வொரு நொடியும்

ஒவ்வொரு நிமிடமும் நீ என்னை நீங்கி இருக்கலாம் 
ஆனால் ஒவ்வொரு நொடியும் 
உன் அருகே தான் 
நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் 
உன் நினைவுகளோடு !!!

தெரியவில்லை இன்று வரை

நீ 
என்னை பிரிந்து
சென்று விட்டாய் 
என்று எனக்கு தெரியும் 
ஆனால்,
பாவப் பட்ட என் இதயத்துக்கு 
அது தெரியவில்லை 
இன்று வரை 
உனக்காகவே 
துடித்துக் கொண்டிருக்கின்றது...♥

என் மனதுக்கு அழகு நீ தான்

ஆயிரம் நட்சத்திரம் 
விண்ணில் இருந்தாலும்
இரவுக்கு அழகு நிலவு தான்...♥ ♥

ஆயிரம் பெண்கள் 
மண்ணில் பிறந்தாலும் 
என் மனதுக்கு அழகு நீ தான்...♥ ♥

எங்கு சென்று ஏமாற போகின்றாய்

கவலையாக தான் இருக்கின்றது
நீ கிடைக்க வில்லை என்று அல்ல ..
உண்மையான அன்பை அறியாத நீ
எங்கு சென்று ஏமாற போகின்றாய் என்று.....♥♥